என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ராணிப்பேட்டையில் பசு மாடு திருடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராணிப்பேட்டையில் மின் கம்பத்தில் கட்டி வைத்த பசு மாட்டை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சிப்காட் (ராணிப்பேட்டை):

  ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 31). இவர் நேற்று முன்தினம், தனது பசு மாட்டை ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள மின் கம்பம் ஒன்றில் கட்டி வைத்துள்ளார். பிறகு வீட்டிற்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது மாட்டை காணவில்லை. மாட்டை, எசையனூரைச் சேர்ந்த ரகுவரன், கீரைசாத்து பகுதியை சேர்ந்த ஆனந்தன் (43) ஆகியோர் திருடிச் சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து பிரபு, ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரகுவரன், ஆனந்தன் ஆகிய 2 பேரையும் ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×