என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பெரியகுளம் அருகே தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியகுளம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பெரியகுளம்:

  பெரியகுளம் வடகரை குருசடி தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 41). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த பாக்யராஜ் குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் இருந்து மீள முடியாமல் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் அவர் சிரமப்பட்டு வந்தார். 

  இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த பாக்யராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாக்யராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×