என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தென்காசி அருகே கோவிலில் திருடியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்காசி அருகே டீ கடை மற்றும் கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  அச்சன்புதூர்:

  தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பாம்பு கோவில் பகுதியில் வசித்து வருபவர் லூர்து (வயது 52). இவர் ரெயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் அருகில் உள்ள விநாயகர் கோவில் இவரின் பொறுப்பில் உள்ளது. இந்த நிலையில் டீ கடை மற்றும் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். 

  இதுகுறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாம்புக்கோவில் சந்தை ரஹ்மானியாபுரம் தெருவைச் சேர்ந்த காதர் மைதீன் மகன் காஜாமைதீன் (32) என்பவர் கோவில் மற்றும் டீக்கடையில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×