என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  அம்பை அருகே தீக்குளித்த மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பை அருகே தீக்குளித்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  அம்பை:

  அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 80). இவர் உடல் நலக்குறைவால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதில் மனமுடைந்து கொசுவர்த்தி சுருளில் வைத்திருந்த தீயினால் போர்வையை கொளுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு, அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கமலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×