என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  சாத்தான்குளம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  சாத்தான்குளம்:

  ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைத் சேர்ந்த பால் மகன் விக்கி (வயது 43). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 19-ந் தேதி பேய்க்குளம் பகுதியில் இருந்து முனைஞ்சிப்பட்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செங்குளம் விலக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

  இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு விக்கி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்் பெர்னார்ட் சேவியர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×