என் மலர்

  செய்திகள்

  எல் முருகன்
  X
  எல் முருகன்

  4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  படகை மோதி 4 தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  இலங்கை கடற்படை படகு மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மெசியான், செந்தில், சாம்சன், நாகராஜ் ஆகிய 4 மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்தது மிக மிக வேதனை அளிக்கிறது.

  இச்சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள இலங்கை பொறுப்பு தூதரிடம், இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது. மறைந்த தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கும், அவர்களது உற்றார்-உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய எனது சார்பிலும், தமிழக பா.ஜ.க.வின் சார்பிலும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×