என் மலர்

  செய்திகள்

  சுற்றுலா பஸ் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
  X
  சுற்றுலா பஸ் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

  திருச்சி அருகே வாய்க்காலில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்- 19 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே சுற்றுலா பஸ் வாய்க்காலில் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
  திருச்சி:

  பெங்களூருவில் இருந்து புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறுக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 55) ஓட்டினார்.

  பஸ்சில் டிரைவர் தவிர 42 பயணிகள் இருந்தனர். திருச்சி மாவட்டம் குணசீலம் அருகே சேலம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சக்கோரை பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் உள்ள வாய்க்காலில் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இதில் பஸ்சின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சிதறின. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
  Next Story
  ×