என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  கொண்டலாம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொண்டலாம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கொண்டலாம்பட்டி:

  கொண்டலாம்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் ஜவுளித் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக வீரபாண்டி அக்ரஹாரத்தை சேர்ந்த பூபதி (வயது 21) என்பவரை நெய்க்காரப்பட்டி இளந்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பூபதி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×