search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    குமரியில் ஒரே நாளில் 182 பேருக்கு தடுப்பூசி

    குமரியில் ஒரே நாளில் 182 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தக்கலை அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய 4 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இந்த மையங்களில் கடந்த 5 நாட்களில் மொத்தம் 496 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இந்தநிலையில் 6-வது நாளான நேற்று 182 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 23 டாக்டர்கள், 15 செவிலியர்கள் உள்பட மொத்தம் 118 பேரும், தக்கலையில் 20 டாக்டர்கள் உள்பட மொத்தம் 30 பேரும், செண்பகராமன்புதூரில் 3 டாக்டர்கள் உள்பட மொத்தம் 18 பேரும், குழித்துறையில் 10 டாக்டர்கள் உள்பட மொத்தம் 16 பேரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 182 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்து உள்ளது.

    தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்ட சில நாட்கள் குறைவான நபர்கள் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆனால் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
    Next Story
    ×