search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்கிறது

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று வரை 715 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்று சுமார் 200 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக டீன் வனிதா தெரிவித்தார்.

    திருச்சி:

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக் கிழமை) 6-வது நாளாக கொரோனா தடுப்பூசி முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டது.

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று வரை 715 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்று சுமார் 200 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக டீன் வனிதா தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பதற்கு டாக்டர்கள், நர்சுகள் தயக்கம் காட்டினர். ஆனால் பக்க விளைவுகள் இல்லாததாலும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து தற்போது ஆர்வத்துடன் முன் வருகிறார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் 180 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று முன்தினம் 190 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் உயரும் என நம்புகிறோம்.

    தடுப்பூசி போடுவதற்கு இணையதளம் மூலமாக பதிவிடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அது தேவையில்லை. பெயர்களை எழுதிக்கொண்டு தடுப்பூசி போட்டுவிட்டு அன்றைய நாளில் கம்ப்யூட்டரில் பதிவு போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதனால் எந்த சுணக்கமும் இல்லை.

    அரசு ஆஸ்பத்திரி மட்டு மல்லாமல் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்து இணையதளத்தில் பதிவு செய்தவர்களே அதிகம் வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து வருபவர்கள் ஆஸ்பத்திரி அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மேலும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் புகைப்படமும் அடையாளத்திற்காக எடுத்து வைக்கிறோம் என்றார்.

    Next Story
    ×