என் மலர்

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தர்மபுரி அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தர்மபுரி அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 51) . இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை தமிழ்ச்செல்வன் நடைபயிற்சி சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். கடத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தை அவர் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×