என் மலர்

  செய்திகள்

  போராட்டம்
  X
  போராட்டம்

  அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவொற்றியூர்:

  சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் அமைந்திருக்கும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு பகுதிகளை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அங்கன்வாடி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பணி முடிந்து ஓய்வுபெறும்போது அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போன்று பென்சன் வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
  Next Story
  ×