என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  உசிலம்பட்டி அருகே வேன் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உசிலம்பட்டி அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  உசிலம்பட்டி:

  உசிலம்பட்டி அருகே உள்ளது காமாட்சிபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சேதுபதி(வயது 22). லோடு வேன் டிரைவராக உள்ளார். இந்த ஊர் அருகில் உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்தவர் தவபாண்டி(21). சேதுபதியும், தவபாண்டியும் ஒரு மோட்டார் சைக்கிளில் காமாட்சி புரத்திலிருந்து உசிலம்பட்டிக்கு வந்தனர். அப்போது பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேன், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு பேரையும் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  ஆனால் கொண்டு செல்லும் வழியில் சேதுபதி பரிதாபமாக இறந்தார். தவபாண்டிக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து வழக்குப்பதிவு உசிலம்பட்டி போலீசார் வேன் டிரைவர் அபினேசை கைது செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×