search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் இதுவரை 42,947 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 16 ஆயிரத்து 600 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் 9 ஆயிரத்து 146 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 131 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பு மருந்தும் என மொத்தம் 9,277 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×