என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெண் ஊழியர் தற்கொலை - காதலனிடம் போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கொடைக்கானல்:

  விழுப்புரத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகள் மேரி (வயது 24). இவர் கொடைக்கானலில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்த பணிக்காக கொடைக்கானல் வந்துவிட்டார். அப்போது அதே மசாஜ் சென்டரில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சுபிஷ் (28) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து மேரியும், சுபிசும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்து மசாஜ் சென்டருக்கு அவர்கள் வந்து சென்றனர்.

  இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் பணியாற்றிய மசாஜ் சென்டர் மூடப்பட்டது. இதனால் மேரியும், சுபிசும் வருமானம் இன்றி தவித்து வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுடன், கருத்து வேறுபாடும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் சுபிஷ் இல்லாதபோது, மேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது காதலன் சுபிசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுபிஷ் கொடுத்த மன அழுத்தம் காரணமாக மேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×