என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருவோணம் அருகே பேக்கரி-மளிகை கடைகளை உடைத்து ரூ.28 ஆயிரம்-பொருட்கள் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவோணம் அருகே பேக்கரி மற்றும் மளிகை கடைகளின் பூட்டுகளை உடைத்து ரூ.28 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஒரத்தநாடு:

  திருவோணத்தை அடுத்துள்ள மூவர் ரோடு சந்திப்பு அருகே வெட்டுவாக்கோட்டையை சேர்ந்தவர் தினகரன் (வயது36). இவர் பேக்கரி கடை வைத்துள்ளார். பில்லு வெட்டிவிடுதியை சேர்ந்த இளங்கோவன் ( 39) என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு தங்களது கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு ெசன்றனர். இந்தநிலையில் நள்ளிரவில் 2 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் மளிகை கடையில் இருந்த ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும், பேக்கரியில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் பொருட்களையும் திருடிச்சென்று விட்டனர்.

  தகவல் அறிந்ததும் திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு போன கடைகளை நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைகளில் பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் ே்தடிவருகின்றனர்.

  Next Story
  ×