search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கிராமங்கள் தோறும் சென்று நாடகம் போடுகிறார்: மு.க.ஸ்டாலினை நம்பி ஏமாந்து விடாதீர்கள் - முதலமைச்சர் பரபரப்பு பேச்சு

    முக ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று நாடகம் போட்டு, பொய் பிரசாரங்களை செய்து வருகிறார் என்றும் அவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்தனர். அவர்களது வழியில் தொடரும் அம்மாவின் அரசு பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. நாம்தான் அவரது வாரிசுகள். பிள்ளைகள்.

    ஏழை மாணவ-மாணவிகளும், உயர்தர கல்வியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. 55 லட்சம் மாணவர்களுக்கு அதனை வழங்கி உள்ளோம்.

    30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுள்ள ஒரே இயக்கம் அ.தி.மு.க. இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கொரோனா காலத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கியதுடன், பொங்கலுக்கு 2,500 ரூபாயை ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கினோம்.

    ஆனால் மு.க.ஸ்டாலின் அதனை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றார். நாங்கள் கொடுக்க நினைத்ததை அவர் தடுக்க முயற்சித்தார். அப்படிப்பட்ட தலைவர் உங்களுக்கு தேவையா? இன்று கிராமம் கிராமமாக சென்று நாடகம் போட்டு வரும் ஸ்டாலின் பொய் பிரசாரங்களை செய்து வருகிறார்.

    அவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல், தங்கள் வீட்டு மக்களை பற்றி மட்டுமே நினைப்பவர்கள் தி.மு.க.வினர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் பெரும் பணக்காரர்கள். ஏழை மக்களை பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

    மு.க.ஸ்டாலினின் பொய் பிரசாரத்துக்கு முடிவு கட்டும் வகையில் வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு எங்களை வெற்றி பெற வையுங்கள். வருகிற 27-ந்தேதி நடைபெறும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பொதுமக்களாகிய நீங்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×