என் மலர்

  செய்திகள்

  திமுக
  X
  திமுக

  தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளருக்கு தி.மு.க.வில் பதவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க.வில் சேர்ந்த டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின். இவர் அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

  தி.மு.க.வில் சேர்ந்த டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

  இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

  இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

  தி.மு.க. சட்டதிட்ட விதி 31 பிரிவு 15-ன் படி தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளராக டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின் (தூத்துக்குடி சின்னமணி நகர்) தலைமைக்கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.

  ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×