search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட எஸ்ஐ வில்சன்
    X
    கொலை செய்யப்பட்ட எஸ்ஐ வில்சன்

    சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- கோவை சிகாபுதீன் வீட்டில் லேப்டாப், சிம்கார்டு பறிமுதல்

    களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுகொலை செய்யப்பபட்ட வழக்கில் கோவை சிகாபுதீன் வீட்டில் லேப்டாப், மற்றும் சிம்கார்டு போன்றவற்றை என்.ஐ.ஏ., போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சமீம் (34), தவுபிக் (31) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த சிராஜூதீன் என்ற சிகாபுதீன் (39) என்பவர் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த 6-ந் தேதி கத்தாரில் இருந்து சென்னை வந்த போது விமான நிலையத்தில் என்.ஐ.ஏ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை என்.ஐ.ஏ., போலீசார் கோவை திருமலை நகரில் உள்ள சிகாபுதீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து பென்டிரைவ், லேப்டாப், சிம்கார்டு, கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து என்.ஐ.ஏ., போலீசார் சிகாபுதீனுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? தடை செய்யப்பட்ட அமைப்புகள் கொடுத்த உத்தரவை நிறைவேற்ற வில்சன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×