search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதியக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

    இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டடிணம் பகுதியிலிருந்து ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் 4 பேர் மீன் பிடிக்க கடந்த 18 ம்தேதி கடலுக்கு சென்று 19-ந் தேதி திரும்பவேண்டியது. ஆனால் திரும்பவில்லை.

    இந்த நிலையில் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் தங்கச்சிமடத்தைச்சேர்ந்த சேசு என்பவரது படகில் மோதி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் 2 மீனவர்கள் உயிர் இழந்தனர்.

    இவர்களது உடல் இலங்கை கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த சம்பபத்தால் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இறந்துள்ளது அப்பகுதி மீனவர்களிடையே கொந் தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று ராமேசு வரம்-மதுரை நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்களின் சாவுக்கு காரணமானவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    தொண்டி பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுக்கோட்டை கடற்கரை வழியாக போக்குவரத்து செல்லாமல் திருவாடானை வழியாக திருப்பி அனுப்பினர். இதனால் வாகனஓட்டிகள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும்நிலை உள்ளது.

    Next Story
    ×