என் மலர்

  செய்திகள்

  பனிப்பொழிவு (கோப்புப்படம்)
  X
  பனிப்பொழிவு (கோப்புப்படம்)

  சென்னையில் இன்று காலை பனிப்பொழிவு திடீர் அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்தது. அதிக பனிப்பொழிவு காரணமாக வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது.
  சென்னை:

  வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் முடிவடையும்.

  இந்த ஆண்டு ஜனவரி மாதமும் பருவ மழை நீடித்தது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பருவமழை பெய்தது.

  இதையடுத்து வடகிழக்கு பருவமழை கடந்த 19-ந் தேதி நிறைவு பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மழை நின்றாலும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

  கடந்த சில தினங்களாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மாலையில் தொடங்கும் பனி மூட்டம் இரவிலும், அதிகாலையிலும் நீடிக்கிறது.

  இன்று வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்தது. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் சென்ற வாகனங்கள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. அதிக பனிப்பொழிவு காரணமாக இன்று வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது.


  Next Story
  ×