என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  சேலம்:

  தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  கொரோனா தொற்று உறுதியான 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த 36 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

  மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  Next Story
  ×