என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  உக்கடம் லாரிபேட்டையில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்கடம் லாரி பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  கோவை:

  கோவை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் குட்கா அதிக அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் ரோந்து சென்று குட்கா பதுக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கோவைக்கு கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து குட்கா மூட்டை, மூட்டையாக கொண்டுவரப்பட்டு கோவையில் குறிப்பிட்ட இடங்களில் குடோன்களில் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

  இந்த நிலையில், கோவை உக்கடம் லாரி பேட்டையில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குட்கா கடத்தி வந்த அப்பாஸ் (வயது38) மற்றும் ஜெய்லவுதீன்(56) ஆகிய இருவரை கைது செய்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×