என் மலர்

  செய்திகள்

  தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளை காணலாம்.
  X
  தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளை காணலாம்.

  தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.11 லட்சம் மஞ்சள், பீடி இலை பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் சிப்காட் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 11 டன் விரலி மஞ்சள், ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 5.95 டன் பீடி இலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த மஞ்சள் மற்றும் பீடி இலை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மஞ்சளை உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×