என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திக்கொன்ற பள்ளி தாளாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூரில் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திக்கொன்ற பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர்.
  திருவாரூர்:

  திருவாரூர் இ.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 39). இவருடைய மனைவி சொர்ண பிரியா(34). இவர்கள் இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.

  இருவரும் பெங்களுருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் திருவாரூரில் தங்கி ஆன்லைன் மூலமாக அலுவலக வேலை பார்த்து வந்தனர்.

  சுந்தரமூர்த்தியின் அண்ணன் ராஜகோபால்(41). இவருடைய மனைவி திவ்யா. இருவரும் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வைத்து நடத்தி வருகின்றனர். ராஜகோபால் அந்த பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறார்.

  தற்போது அண்ணன்-தம்பி இருவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த பள்ளிக்காக சுந்தரமூர்த்தி, ராஜகோபாலிடம் ரூ.15 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜகோபாலுக்கும், அவரது தம்பி மனைவி சொர்ணபிரியாவிற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால், சொர்ணபிரியா கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

  ரத்த வெள்ளத்தில் துடி துடித்து விழுந்தவரை குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சொர்ணபிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்து சுந்தரமூர்த்தி திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தார். கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண் என்ஜினீயரை பள்ளி தாளாளர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருவாரூரில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×