
இதற்கிடையில், தமிழக முதல்மந்திரி நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22-ம் தேதி (ஜனவரி 22) நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்மந்திரியுமான ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணைஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல், ஜெயலலிதா நினைவிட திறப்பு, சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.