search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    விடுபட்டுள்ள இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்- மேற்பார்வை அதிகாரி ஷோபனா அறிவுரை

    விடுபட்டுள்ள இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மேற்பார்வை அதிகாரி ஷோபனா அறிவுரை கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மேற்பார்வையிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் மற்றும் தமிழ்நாடு கைத்தறி தொழில்வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனருமான ஏ.ஷோபனா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், 20.1.2021 (நாளை) வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட விவரம் மற்றும் கடந்த தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு விழிப்புணர்வு நடத்தப்படும் விவரம் ஆகியவை பற்றி மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, விரிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தொடர்ந்து படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மனுக்கள் பெற்று உரிய கள விசாரணை மேற்கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும் என்றும், விடுபட்டுள்ள 18 முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுமக்களிடையே தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×