என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  பத்மநாபபுரம்:

  தக்கலை அருகே பனவிளை வடலிவிளை பகுதியை சேர்ந்த தங்கப்பனின் மகன் நிர்மல்(வயது 30), தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டைக்காடு பகுதியை சேர்ந்த சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

  இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிந்து தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். மனைவி பிரிந்து சென்ற பின்பு நிர்மல் மனமுடைந்து காணப்பட்டார்.

  நேற்று முன்தினம் நிர்மல் அவரது தந்தை வீட்டுக்கு சென்றார். வீட்டினுள் உள்ள அறைக்கு சென்ற நிர்மல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தங்கப்பன் அறையில் சென்று பார்த்தபோது நிர்மல் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  இதுகுறித்து தங்கப்பன் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×