search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மை பணிகள் தீவிரம்
    X
    தூய்மை பணிகள் தீவிரம்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 226 பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி 226 பள்ளிகளில் தூய்மை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன், வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது.

    அதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவருக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு இதை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 226 பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வகுப்பு அறை, கழிப்பறை, பள்ளிவளாகம், போன்ற இடங்களை சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ் கூறியதாவது:-

    பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் சரிபார்ப்பு பட்டியல் தரப்பட்டுள்ளது.

    அவசரகால உதவிக்காக அருகில் உள்ள காவல் நிலையங்கள், மருத்துவமனைகளின் தொடர்பு எண்கள் தயாரிக்கப்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர் மேஜையில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்ப அளவை பரிசோதனை செய்ய தெர்மல் ஸ்கேனர் கருவி, கிருமிநாசினி போன்றவை தயார் நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி பார்வையிட உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். நேர்முக உதவியாளர் பரணி உடனிருந்தார்.
    Next Story
    ×