search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    சென்னையில் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் நடக்கிறது.
    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் நடக்கிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான இந்த குழுவினரின் சுற்றுப்பயண விபரங்களை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    இன்று காலையில் சென்னை வடக்கு மாவட்டத்திலும், மாலையில் சென்னை வடகிழக்கு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

    நாளை (19-ந் தேதி) காலையில் சென்னை கிழக்கு, மாலையில் சென்னை தெற்கு மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (20-ந் தேதி) காலையில் சென்னை தென்மேற்கு, மாலையில் சென்னை மேற்கு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

    இந்த சுற்றுப்பணத்தின்போது அந்த பகுதியின் பொதுவான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்து நேரில் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×