search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரைக்குளம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து செடிகளை காணலாம்.
    X
    ஆரைக்குளம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து செடிகளை காணலாம்.

    ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்

    ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் மானாவாரி பயிர்கள் நாசமாயின. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயப்பணி ஆகும். மேலும் இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. ஒட்டப்பிடாரம் தாலுகாவில் அதிகமாக சுமார் 10 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், மிளகாய் ஆகியன அதிகமாக பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது உளுந்து, பாசிப்பயறு அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இ்ந்த நிலையில் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் உளுந்து, பாசிப்பயிறு செடியிலேயே முளைத்து வருகிறது. மலைப்பட்டி, ஒட்டநத்தம், பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, அக்கநாயக்கன்பட்டி, ஓம்.சரவணாபுரம், சில்லாங்குளம், பசுவந்தனை, எப்போதும்வென்றான், கொல்லம்பரும்பு, ஆரைக்குளம், வேடநத்தம், குலசேகரநல்லூர், கொம்பாடி, தளவாய்புரம், கைலாசபுரம், நாரைக்கிணறு, மருதன்வாழ்வு, கீழக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள உளுந்து, பாசிப்பயிறு முற்றிலும் செடியில் முளைத்து வருகிறது.

    மேலும் மிளகாய் செடி, வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மிளகாய் செடி, வெங்காயம் அழுகிய நிலையில் உள்ளது. மக்காச்சோளம் மழையால் மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே ஓட்டப்பிடாரம் தாலுகாவில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
    Next Story
    ×