என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  தேனாம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனாம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  சென்னை தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் துப்புரவு பணி செய்து வந்தவர், விஜயா (வயது 65). இவர் நேற்றுமுன்தினம் இரவு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் விஜயாவின் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

  பின்னர் அவர் ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட் டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

  இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஜயா மீது மோட்டார் சைக்கிளை மோதிய வேளச்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ் (25) கைது செய்யப்பட்டார்.
  Next Story
  ×