search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தியேட்டர் காவலாளியை தாக்கிய 5 பேர் கைது

    மதுரை அருகே தியேட்டர் காவலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டரில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஒடிக்கொண்டிருக்கிறது. சம்பவத்தன்று அந்த தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க வந்த 5 வாலிபர்கள் முககவசம் அணியாமல் வந்துள்ளனர். எனவே அங்கிருந்த காவலாளி கதிரேசன் அவர்களை முககவசம் அணிந்து தான் வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கும் காவலாளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காவலாளி தாக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 5 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×