search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாமக்கல் மாவட்டத்தில், மு.க.ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கீரம்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் கோபி முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சரோஜா, மகளிர் அணி மணிமேகலை, ரேணுகா, அணியார் சுப்பு உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் நாமக்கல் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செல்லப்பா காலனியில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதில் நகர பொருளாளர் கோபால், நகர இளைஞரணி செயலாளர் சீனிவாசன், மாணவரணி செயலாளர் ஜெகன், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ராதா சந்திரசேகர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஹரி ராகவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆண்டகளூர் கேட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதில் ராசிபுரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி, ஒன்றிய கவுன்சிலர் மணி வேம்பு சேகரன், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடீஸ்வரன், ராசிபுரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வடுகம் பாலன், பில்லாநல்லூர் பேரூர் செயலாளர் பழனிசாமி, பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் மகேந்திரன், ஒன்றிய இணை செயலாளர் முத்தாயி குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் திருச்செங்கோடு நகர செயலாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்லப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் (மேற்கு) சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் புரட்சி முத்து வரவேற்று பேசினர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சங்கர், ஒன்றிய தகவல் தொழில் நுட்புபிரிவு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், மகாலிங்கம், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச்செயலாளர் வீரப்பன், பேரூர் செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ரமேஷ், துணைச்செயலாளர் கென்னடி, இணை செயலாளர் நாகலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்ரீ பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் வக்கீல் சசிகுமார், பெரியகுளம் ஊராட்சி தலைவர் மாதேஸ்வரன், ஆர்.பி.புதூர் முருகேசன், சேந்தமங்கலம் ஒன்றிய மீனவரணி செயலாளர் பாஸ்கரன், பள்ளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் அருண் பாண்டியன், அக்கியம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பள்ளிபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வார்டு செயலாளர்கள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்கணேஷ், மாதேஸ்வரன், ஜெயாவைத்தி, சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயலாளர் செந்தில் தலைமையில் காவேரி ஆர்.எஸ். பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் ரவி, சிங்காரவேல், களியனூர் ரவி, மற்றும் ஆலாம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்லத்துரை, நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய பேரவை, பாசறை நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சித்தலைவர் மாதேஸ்வரன் என பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் வெப்படை 4 ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கந்தம்பாளையம் அருகே வசந்தபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பரமத்தி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுகுமாரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பரமத்திவேலூர் கவுன்சிலர்கள் குழந்தை வேல், சக்திவேல் விமலா, சண்முகம், மற்றும் கோபால், மாரப்பன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மோகனூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் மோகனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கருமண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கமுத்து வரவேற்றார்.. அணியாபுரம் - தோளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ருத்ராதேவி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் ஆவின் சேர்மன் வேலு ராஜாமணி, லத்துவாடி கூட்டுறவு கடன் சங்க தலைவர் அம்மையப்பன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மதியழகன், அரசநத்தம் முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க தலைவர் பாஸ்கர், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் முருகேசன், நகர் இளைஞரணி கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் சிவஞானம் நன்றி கூறினார்

    Next Story
    ×