search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டியின் போது கண்ணீரை துடைத்த வாலிபர்
    X
    போட்டியின் போது கண்ணீரை துடைத்த வாலிபர்

    திருச்செந்தூர் அருகே போட்டியாளர்களை அழ வைத்த பொங்கல் விளையாட்டு போட்டி

    திருச்செந்தூர் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி வித்தியாசமான போட்டியை நடத்தி பங்கேற்பாளர்களை அழ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
    திருச்செந்தூர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் விதவிதமான விளையாட்டு போட்டிகள் நடப்பதுண்டு. அதுபோல திருச்செந்தூர் பகுதியில் உள்ள காயாமொழி கிராமத்தில் வித்தியாசமான போட்டி ஒன்று நடந்தது.

    இந்த போட்டியின் விதிமுறை இதுதான். முதலில் 10 பச்சை மிளகாய்களை சாப்பிட வேண்டும். அதன்பின்னர் தோல் நீக்கப்பட்ட கற்றாழையை சாப்பிட வேண்டும். கடைசியாக எலுமிச்சை பழத்தில் பாதியும், சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும். இதை அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

    இந்த போட்டியில் 8 வாலிபர்கள் தைரியமாக பங்கேற்றனர். போட்டி ஆரம்பித்த உடனே வாலிபர்கள் பச்சை மிளகாயை சாப்பிட ஆரம்பித்தனர். சிறுது நேரத்தில் சில வாலிபர்கள் கண்ணீர் வடித்தனர். கூடியிருந்த பொதுமக்கள், சிறுவர், சிறுமியர் சிரித்தபடி போட்டியை ரசித்தனர். இந்த போட்டியில் ஒரு நிமிடத்திற்குள் 10 பச்சை மிளகாயை சாப்பிட்ட சுபாஸ் என்ற  வாலிபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

    பொங்கல் போட்டி என்றால் ஓட்டப்பந்தயம், முறுக்கு கடித்தல், சைக்கிள் பந்தயம் என்று இருக்கும். ஆனால் இந்த கிராமத்தில் இப்படி ஒரு போட்டியை நடத்தி வாலிபர்களை அழ வைத்த சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது.
    Next Story
    ×