search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டுப் பொங்கலையொட்டி மந்தை கூறும் நிகழ்ச்சி
    X
    மாட்டுப் பொங்கலையொட்டி மந்தை கூறும் நிகழ்ச்சி

    திருவாரூர் அருகே மாட்டுப் பொங்கலையொட்டி மந்தை கூறும் நிகழ்ச்சி

    திருவாரூர் அருகே அரசவனங்காடு கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.


    திருவாரூர் அருகே அரசவனங்காடு கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரசவனங்காடு சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த வீடுகளில் இருந்து மாடுகளை அழைத்து வந்து ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தனர். மாடுகளை சுற்றி மஞ்சள் நீரால் வேப்பிலையை கொண்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி மூன்று முறை வலம் வந்தனர்.

    அதன் பிறகு மாடு மற்றும் கன்றுகளுக்கு பொங்கல் மற்றும் பழங்கள் அளித்து தங்கள் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.

    தொடர்ந்து அரசவனங்காடு கிராமத்தில் உள்ள அனைவரும் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று தேங்காய் உடைத்து வழிபட்டனர். பிறகு அருகில் வீடுகளுக்கும் சென்று பெரியவர்களிடம் காலில் விழுந்து வணங்கி வழிபட்டு ஆசி பெற்றனர். இந்த மந்தை கூறும் நிகழ்வினை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    Next Story
    ×