search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விற்பனை
    X
    மது விற்பனை

    பொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மது விற்பனை

    தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது.
    தூத்துக்குடி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு அவ்வப்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. தற்போது முழுவீச்சில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விறுவிறுப்பான விற்பனை நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை மற்றும் நேற்று திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலியாக மதுபானங்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.

    நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று மட்டும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ரூ.6½ கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. இதில் பீர் 2 ஆயிரத்து 500 பெட்டிகளும், மற்ற மது வகைகள் 9 ஆயிரம் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டும் இதே அளவில் விற்பனை நடந்தாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×