search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேரளம், பூந்தோட்டம் பகுதிகளில் 910 லிட்டர் சாராயம் பறிமுதல்- பெண்கள் உள்பட 11 பேர் கைது

    பேரளம், பூந்தோட்டம் பகுதிகளில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 910 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டத்தில் புதுச்சேரி சாராய விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கபிலன், முத்துக்குமார், ஏட்டு அருள்ஜோதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பில்லூர் அருகே உள்ள அண்ட குடியான் தோப்பு பகுதியில் வீட்டின் அருகில் புதுச்சேரி சாராயம் விற்பனை செய்த இந்திராணி(வயது50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பேரளம், பூந்தோட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் புதுச்சேரி சாராயம் விற்ற ஏ.கிளியனூர் பகுதி மெயின் ரோட்டை சேர்ந்த வசந்தா (60), துளார் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சூர்யா (24), கோவில் திருமாளம் பகுதியை சேர்ந்த சுமதி (54), கொத்தவாசல் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (35), நெடுந்திடல் பகுதியை சேர்ந்த காமராஜ் (25), கோவில் திருமாளம் நெடுந்திடல் பகுதியை சேர்ந்த திருச்செல்வம் (40), கீரனூர் மேல தெருவை சேர்ந்த பக்கிரிசாமி (45), கூத்தனூர் காடுவெட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (36), எண்ணக்குடி கிழ தெருவை சேர்ந்த ரமே‌‌ஷ் (42) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், குமாரமங்கலம் பாலம் அருகே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தபோது அதில் 110 லிட்டர் சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது திருமருகல் அருகே உள்ள ஏர்வாடி பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பதும், சாராயத்தை விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 11 பேரிடம் இருந்து 910 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×