search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஞானதேசிகன்
    X
    ஞானதேசிகன்

    த.மா.கா.துணைத்தலைவர் ஞானதேசிகன் காலமானார்

    தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தவர் ஞானதேசிகன் (71). இவர் கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஞானதேசிகன் இன்று காலமானார்.

    ஞானதேசிகன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    2011 முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த ஞானதேசிகன், மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
    Next Story
    ×