search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்
    X
    சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

    பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

    பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போடியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூ:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

    மாட்டுப் பொங்கலான இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று நடந்தது.

    இதற்காக மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரி, வேன்களில் 700 காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 450 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்கள் 75 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றுக்கும் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டு திடலில் வீரர்கள் காயமடையாமல் இருக்க தென்னை நார் போடப்பட்டிருந்தன.

    இன்று காலை 8 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் தொடங்கியது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    முதலில் வாடிவாசலில் இருந்து மஞ்சமலை சுவாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வரிசையாக 6 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கோவில் காளைகள் என்பதால் அதை வீரர்கள் பிடிக்கவில்லை. சீறிப்பாய்ந்த காளைகள்

    காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டதும், வீரர்கள் போட்டி, போட்டு திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பியது. சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு போக்கு காட்டியது. வாடிவாசலில் இருந்து வெளியே ஆக்ரோ‌ஷ மாக பாயந்த காளைகளை சில வீரர்கள் அசத்தலாக பிடித்தனர்.

    காளைகளின் வாலை, கொம்புகளை பிடிக்கக் கூடாது என மாடுபிடி வீரர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது. இந்த விதிமுறைகளை மீறியவர்கள் திடலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பார்வையாளர்களுக்கு காலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளானோர் வந்திருந்தனர். வீட்டில் மாடிகளில் நின்றும், கேலரிகளில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

    காய மடைந்த வீரர்களை மருத்துவ மனைக்கு ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் டி.ஐ.ஜி. ராஜேந்திரன் மேற்பார் வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×