search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரிக்கரை உடைப்பு
    X
    ஏரிக்கரை உடைப்பு

    தஞ்சை அருகே கனமழையால் ஏரிக்கரை உடைப்பு- 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

    தஞ்சை அருகே பெய்த கனமழை காரணமாக சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது. தொடர்மழையால் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்களும் முழுகொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக தஞ்சை அருகே உள்ள அதினாம்பட்டு கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாமுண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரியின் தென்கரையில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    மளமளவென வெளியேறிய தண்ணீர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர், கடலை‌, எள், உளுந்து போன்ற சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் அதினாம்பட்டு, வேங்காரயான்குடி, வல்லுண்டாம்பட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் பல வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    சுமார் 15 வருடங்களாக இந்த ஏரி முறையாக தூர்வாரப்படவில்லை என்பதால் தான், உடைப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Next Story
    ×