search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு- மண்டல தலைவர் தகவல்

    தமிழகம் மற்றும் ஆந்திராவில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 4 கோடி முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளில் 1½ முட்டைகள் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதர முட்டைகள் வெளிநாடு மற்றும் வடமாநிலங்களுக்கும், தமிழகத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கேரளா உள்பட 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால், இந்திய அளவில் முட்டை மற்றும் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இதனால் நாமக்கல் பண்ணையாளர்கள் முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையை காட்டிலும் குறைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கு பிறகு முட்டை விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் குளிர்பதன கிடங்குகளிலும் சேமித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் வருகிற 18-ந் தேதியும், தமிழகத்தில் 19-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் சத்துணவு திட்டத்திற்கு 9 கோடி முட்டைகள் தேவை என தனியார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தினசரி முட்டை விற்பனை மேம்பட்டு வருகிறது. எனவே வருகிற 18-ந் தேதிக்கு பிறகு முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆதலால் கோழிப்பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்து கொடுக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×