search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தபால் ஊழியர் கைது

    வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக தபால் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக தபால் ஊழியரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 31) . இவர் சேலம் தலைமை தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் கன்னங்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்த மாலினி (25) என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மாலினியின் பெற்றோர் விக்னேஷ்வரனுக்கு நகை, பணம் வரதட்சணையாக கொடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக மாலினியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். மாலினிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு கணவர் விக்னேஸ்வரன் மனைவியை அழைத்துச் செல்லாமல் இருந்து உள்ளார்.

    மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாலினி அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

    மேலும் இதில் சம்பந்தப்பட்ட அவரது தந்தை பாலசுப்பிரமணியம், தாய் சாந்தி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×