search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் ரத்து- மு.க.ஸ்டாலின் பேச்சு

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வேளாண் பயிர்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி அருகே உள்ள நத்தம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டனர். அவர்கள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.

    பின்னர் முக ஸ்டாலின் பேசியதாவது,

    ஒற்றுமை உணர்வோடு அனைவரும் பொங்கலை கொண்டாடுவோம். நீட் தேர்வை திட்டமிட்டு புகுத்தி மாணவர்களை மத்திய பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இதுவரை 16 மாணவ- மாணவிகள் பலியாகி உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 4 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கலைஞர். 7 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வேளாண் பயிர்கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு எப்போதும் தி.மு.க. துணை நிற்கும்.

    கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன் தள்ளுபடி செய்யப்படும்.

    தமிழக முதல்வர் பச்சை துண்டு அணிந்து கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவையொட்டி அங்கு கும்மியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜ், முன்னாள் அமைச்சர் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் செல்வசேகரன், சுகுமாரன், ரமேஷ், ராஜ், மூர்த்தி, சக்திவேல், மணிபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ரவி, துணை தலைவர் தமிழ் செல்வி பூமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், அத்திப்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் எம். டி. ஜி. கதிர்வேல், மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், கவுன்சிலர் ஜமுனா ரஜினி, மீஞ்சூர் தமிழ் உதயன், கோளூர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×