search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை படத்தில் காணலாம்
    X
    வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை படத்தில் காணலாம்

    புகளூர் வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    புகளூர் வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் புகளூர் வாய்க்காலின் குறுக்கே அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய பாலம் கட்டப்பட்டது. முனிநாதபுரம் காவிரி ஆற்றின் அருகே சுற்றுவட்டாரப் பகுதி பொது மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அதேபோல் காவிரி ஆற்றிற்கும் புகளூர் வாய்க்காலுக்கும் இடையே விவசாயிகள் தங்கள் நிலங்களில் வாழை, நெல், கரும்பு, வெற்றிலை கொடிக்கால் போன்ற பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். பயிர்களுக்கு பல்வேறு வகையான உரங்களை வைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

    மேலும் விளைந்த பொருட்களை இந்த குறுகிய பாலத்தின் வழியாக எடுத்துச்செல்ல முடியாததால் முத்தனூர் பகுதிக்குச் சென்று அங்கிருந்து விளைந்த பொருட்களையும், பல்வேறு வகையான மூட்டைகளையும் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும், பல்வேறு வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

    விவசாயிகள் குறுகிய பாலத்தின் வழியே பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புகளூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்படு்ள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×