search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடன்குடி பகுதியில் பூத்துக் குலுங்கும் பொங்கல் பூவை படத்தில் காணலாம்.
    X
    உடன்குடி பகுதியில் பூத்துக் குலுங்கும் பொங்கல் பூவை படத்தில் காணலாம்.

    உடன்குடி பகுதியில் பண்டிகையை வரவேற்று பூத்துக்குலுங்கும் ‘பொங்கல் பூ’

    உடன்குடி பகுதியில் பொங்கல் பண்டிகையை வரவேற்று பல இடங்களில் பொங்கல் பூ பூத்து குலுங்குகிறது.
    உடன்குடி:

    பொங்கல் என்றாலே மங்களம் தான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு கோலமிட்டு சூரிய பகவானுக்கு கரும்பு, வாழை பழம், வாழை இலை, மஞ்சள் குலை, புதுப்பானையில் பச்சரிசி பொங்கல், வெற்றிலை, பாக்கு, பனங்கிழங்கு, பல வகையான காய்கறிகள், வாசனை பூக்கள், இப்படி ஏராளமான மங்களகரமான பொருட்களை வைத்து பொதுமக்கள் வணங்குவதில் பொங்கல் பூவும் முக்கியமாக இடம்பெறும்.

    பொங்கல் கொண்டாட இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் காட்டுப் பகுதியிலும், சாலை பகுதியிலும் பொங்கலை வரவேற்று பூத்துக் கிடக்கிறது பொங்கல் பூ. இந்தப் பூவை எடுத்து, அதனுடன் மாவிளையும் சேர்த்து கடைவீதிக்கு கொண்டு வந்து சிறு கட்டுகளாக கட்டி ஒரு கட்டு ஒரு ரூபாய் முதல் ரூ.2 வரை விற்பனை செய்கின்றனர். இவற்றை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். பொங்கல் பொருட்களுடன் இந்த பூ விற்பனையும் கனஜோராக நடந்து வருகிறது.

    தற்போது உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோடு ஓரத்திலும், முத்துகிருஷ்ணாபுரம், தாண்டவன்காடு ரோடு, பரமன்குறிச்சி உட்பட ஏராளமான இடங்களில் தற்போது பொங்கல் பூ கொத்துக் கொத்தாக பூத்து கிடக்கிறது. இவற்றை பலரும் கொத்தாக பறித்துக் கொண்டு சென்று வீட்டின் முகப்பிலும், பூஜை அறைகளிலும் மாவிளையும் சேர்த்து கட்டி வைத்து வருகின்றனர்.
    Next Story
    ×