search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு
    X
    ஜல்லிக்கட்டு

    6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்- தமிழக அரசு உத்தரவு

    சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை.

    தேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி; திருப்பூர் மாவட்டம் அழகுமலை; புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை (அம்மன்குளம்); சிவகங்கை மாவட்டம் சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×