search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருந்து குடோனில் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த போது எடுத்த படம்.
    X
    மருந்து குடோனில் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த போது எடுத்த படம்.

    சிங்காநல்லூரில் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து - ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசம்

    சிங்காநல்லூரில் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசமாகின.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே பாரதிநகரில் அழகு செந்தில் என்பவ ருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் மருந்து குடோன் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த குடோனில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிக ளில் உள்ள ஆஸ்பத்திரிகள், மருந்தகங்களுக்கு மருந்து வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல குடோனை பூட்டி விட்டு சென்றனர். இரவு ஒரு காவலாளி மட்டும் பணியில் இருந்துள்ளார்.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென குடோனில் இருந்து பலத்த சத்தத்துடன் கரும்புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி, குடோன் பொறுப்பாளர் தாமோதரனுக்கு தகவல் தெரிவித் தார். அவர் உடனே வந்து பார்த்த போது குடோன் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

    சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இது குறித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் 6 வண்டிகளில் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் மின்சார வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். 20 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

    மேலும் குடோன் அருகே உள்ள பெயிண்ட் குடோனில் தீ பரவாத வகையில் தீயணைப்பு வீரர்கள் திறம்பட செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்த விபத்தில் குடோனில் இருந்த மருந்து பொருட்கள், கை கழுவும் திரவம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகைமூட்டமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×