
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்பு செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திசையன்விளையில் தாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இடத்தை சிலர் தங்களுடைய நிலம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இசக்கியம்மாள் (வயது 50) என்ற பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இசக்கியம்மாளை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.