search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளத்தில் உருண்டு விழுந்த வேனை படத்தில் காணலாம்.
    X
    பள்ளத்தில் உருண்டு விழுந்த வேனை படத்தில் காணலாம்.

    கொடைக்கானல் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த சுற்றுலா வேன்- 8 பேர் படுகாயம்

    கொடைக்கானல் மலைப்பாதையில் சுற்றுலா வேன் நிலைதடுமாறி 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கொடைக்கானல்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 15 பேர் வேன் ஒன்றில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அந்த வேனை கும்பகோணத்தை சேர்ந்த பிரதாப் (வயது 23) என்பவர் ஓட்டினார். கொடைக்கானல் அருகே மயிலாடும்பாறை என்ற இடத்தில் மலைப்பாதையில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேன் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறிய அந்த வேன், மலைப்பாதையில் இருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த பாரிஸ் (23), ரியாஸ் (17), அஜீஸ் (20), ஆசிக் (24), முஜாஹிதீன் (20), அஸ்லாம் (23) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இதற்கிடையே பள்ளத்தில் வேன் உருண்டு விழுந்தபோது, அதில் வந்த சுற்றுலா பயணிகள் அபயகுரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, வேனில் இடிபாடுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×